Pages

Saturday 21 July 2012

அரஃபா மஸ்ஜித் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நீடூரில் பள்ளிவாசல்களுக்கு பஞ்சமில்லை, எங்கு திரும்பினாலும் பள்ளிவாசல்கள். இப்படி பள்ளிவாசல்கள் நிறைந்த ஊரில், குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படும் பள்ளிவாசல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நீடூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை முயற்சியை மேற்கொண்டது. அல்லாஹ்வின் உதவியினால் இந்த பணி வெற்றியடைந்தது. அல்லாஹ்வின் நல்லுதவியுடன் நீடூரில் 'அரஃபா மஸ்ஜித்' என்ற பெயரில் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி இனிதே தொடங்கபட்டுள்ளது நபிவழியை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஒரு குறிக்கோளுக்காகவே இப்பள்ளி கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏகத்துவ பள்ளி கட்


அரஃபா மஸ்ஜித்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நீடூரில் பள்ளிவாசல்களுக்கு பஞ்சமில்லை, எங்கு திரும்பினாலும் பள்ளிவாசல்கள். இப்படி பள்ளிவாசல்கள் நிறைந்த ஊரில், குர்ஆன் சுன்னா அடிப்படையில் செயல்படும் பள்ளிவாசல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நீடூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை முயற்சியை மேற்கொண்டது. அல்லாஹ்வின் உதவியினால் இந்த பணி வெற்றியடைந்தது.
அல்லாஹ்வின் நல்லுதவியுடன் நீடூரில் 'அரஃபா மஸ்ஜித்' என்ற பெயரில் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி இனிதே தொடங்கபட்டுள்ளது நபிவழியை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஒரு குறிக்கோளுக்காகவே இப்பள்ளி கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏகத்துவ பள்ளி கட்டுவதற்கு நீடூர் சகோதரர் ஒருவர்நீடூர் சலவாத் பாவா காலனியில் உள்ள தனக்கு சொந்தமான 3024சதுரடியை கொண்ட மனையை இலவசமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு தந்துள்ளார்.
இப்பள்ளி கட்டுமான பணிக்காக ரூபாய் 30 லட்சம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளதுஇன்ஷா அல்லாஹ் இப்பள்ளியின் ஒவ்வொரு கட்டத்திலும் வரவு செலவு கணக்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்இங்கு கட்டாய வசூல் கிடையாதுஇப்பள்ளியினை கட்டி முடிக்க நாம் அனைவரும் நம்மளால் முடிந்த உதவியை செய்து நிரந்தர நன்மை தர கூடிய இப்பணியை நல்லவிதமாக முடிப்பதற்கு அல்லாஹ்விடம் துவா கேட்போமாக
ஆமீன்.
 பள்ளியின் கட்டுமான பணி...
அரஃபா மஸ்ஜித்தின் கட்டுமானப்பணி முதல்தளம் வரை அல்லாஹ்வின் பேரருளால் இனிதே நிறைவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!

கட்டுமானப்பணியின் போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே;





பள்ளியின்ஆரம்பகால கட்டுமான பணியின் போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே;















No comments:

Post a Comment